ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகர ஈறு, வருமொழிக்கண் வன்கணம் வரினும், அல்வழி வேற்றுமை என்ற ஈரிடத்தும் இயல்பாகப் புணரும். எ-டு : எஃகு கடிது, எஃகு பெரிது – அல்வழி (தொ. எ. 425 நச்.); எஃகு கடுமை, எஃகு பெருமை – வேற்றுமை (413 நச்.)