அவ்விரு திணையினையும் சொல் சொல்லும்.(தொ. சொ. 1 இள., நச்., கல்., ப. உ.)அவ்விரு திணையின்கண்ணும் சொல் இசைக்கும்.(1 சேனா. உரை)சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாதலின் அவ்விரு திணையின்கண்ணும் என ஏழாவது விரிக்கப்பட்டது. ‘செலவினும் வரவினு ம்’ (28) முதலிய இடத்தும் செலவின்கண்ணும் வரவின் – கண்ணும் எனஏழாவதே விரிக்கப்படும். (சேனா. உரை)இரண்டாம் வேற்றுமையுருபு இன்சாரியை வருமிடத்தே விரிந்தே வரல்வேண்டும் என்பது விதியாதலின் இரண்டாவது விரித்தல் ஏலாது எனில்,‘அரு ங்கற்பின்… துணைவியர்’,‘சிலசொல்லின்… துணைவியர்’ (புறநா. 166) எனச் சான்றோர் செய்யுளிலும், ‘சார்ந்து- வரல் மரபின்மூன்று’ எனத் தொல்காப்பிய முதல் நூற்பாவிலும் இன்சாரியை உள்வழி இரண்டனுருபு தொக் கும் வரும் மரபுண்மையான், அவ்விருதிணையினையும் சொல்குறிப்பிடும் என இரண்டாவது விரிக்கப்பட்டது.‘இசைப்பு இசையாகும்’ என்றதனான் இசைக்கும் என்பதன் பொருள் ஒலிக்கும்என்பதே ஆயினும், சொல்லுக்குப் பொருள் உணர்த்தும்வழியல்லது ஒலித்தல்கூடாமையின், உணர்த்தும் என்னும் தொழிலை இசைக்கும் என்னும் தொழி லான்கூறியவாறாகக் கொள்க. பொருளை உணர்த்துவான் ஒரு சாத்தனே எனினும், அவற்குஅது கருவியாக அல்லது உணர்த்தலாகாமையின், அக்கருவிமேல் தொழில் ஏற்றிச்‘சொல்லுணர்த்தும்’ என்று கருவிகருத்தாவாகக் கூறினார்.(1 நச்., கல். உரை)பொருளின்றேல் சொற்களின் தோற்றம் இல்லை. ஆதலின் சொல் ஆயிருதிணையின்கண் தோன்றி அவற்றை இசைக்கும் எனக் கொள்க. ‘ஆயிரு திணையினைஇசைக்கும்’ என்று இரண்டாவது விரிப்பின், பொருளும் சொல்லும் வேறுவேறாகத் தோன்றும் எனவும், சொற்கள் இடுகுறியாகக் கட்டிய வழக்கு எனவும்பொருள்பட்டு மொழியியலுக்கும் அறிவியலுக்கும் முரண் உண்டாம். சொல்தன்னை யுணர்த்திப் பின் பொருளையும் அறிவிக்குமாறு போல, முதற்கண் சொல்பொருளை இடமாகக்கொண்டு தோன்றிப் பின்னர் அப் பொருளை அறிவிப்பது அதன்தன்மையாம். (1. ச. பால.)