சங்ககாலத்தில் இருந்தே தெரியவரும் ஊர்ப்பெயர்களுள் ஒன்று ஆமூர். வளம் பெண்ணையாற்று பெருகிய திருமுனைப்பாடி நாட்டுள் உள்ள ஊர்களுள் ஒன்று ஆமூர் என்பது பெரிய புராணம் சுட்டும் செய்தி. இங்கு. திருநாவுக்கரசர் பிறந்த செய்தியையும் சேக்கிழார் உரைக்கின்றார். இவ்வூர்ச் சிறப்பை அவர், இவ்வகைய திருநாட்டில் எனைப் பலவூர்களும் என்றும் மெய்வளங்கள் ஓங்க வரும் மேன்மையன ஆங்கு அவற்றுள் சைவ நெறி ஏழுலகும் பாலிக்கும் தன்மையினால் தெய்வ நெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் திருவாமூர்( 12 ) எனவே என்கின்றார். பண்டு தொட்டே இருந்து வந்த இவ்வூர், இடைக்காலத்தில் சைவ சமயம் மலர்ச்சி பெற்றதொரு ஊராகவும் இருந்தது என்பது தெரியவருகிறது.