சிறுபாணாற்றுப்படை, ஐங்குறு நூறு ,அகநானூறு, புறநானூறு ,ஆகிய சங்க இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் ஊர்ப் பெயர்களுள் ஆமூர் என்பதும் ஒன்று. அழகிய குளிர்ந்த கிடங்கினையும், அரிய காவலையும், அகன்ற அகங்களையும். நிறைந்த அந்தணர்களையும் உடையது ஆமூர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. சோழரின் ஆமூர் அன்ன நலமுடையவள் தலைவி எனத் தலைவியின் நலம் பாராட்டுகிறது ஐங்குறு நூறு. கொடுமுடி என்னும் மன்னனால் பாதுகாக்கப் பெறுவதும் நெடுந் தொலைவிலும் விளங்கித் தோன்றுவதும் ஆகிய இறப்பினையுடையது ஆமூர் என்று அகநானூறு கூறுகிறது. இந்த ஆமூர் குறும்பொறை மலையின் கீழ்ப்பாலுள்ள பாலை நிலத்தது. கவுதமன் சாதேவனார் என்ற என்ற சங்க காலப் புலவர் இவ்வூரினர். ஆகவே ஆமூர்க் கவுதமன் சாதேவனார் எனப் பெயா் பெற்றார். ஆமூரைச் சேர்ந்த மல்லன் ஒருவனைச் சோழன் போர்வைக் கோப் பெருநற்கிள்ளி வென்ற பொழுது சாத்தந்தையார் என்ற புலவர் பாடியபாடல் ஒன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ள து. “முக்காவனாட்டு ஆமூர் மல்லன்” என்ற கூற்று “ஆமூர்” முக்கா வனாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய மாமல்லபுரம் இருக்கும் பகுதி அமூர் நாடாக இருந்திருக்க வேண்டும், வேலூரிலிருந்து கிடங்கலை நோக்கச் செல்லும் வழியில் ஆமூர் இருப்பதாகச் சிறுபாணாற்றுப் படையில் கூறப் பெற்றுள்ளது. ஆயினும் ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர் திண்டிவனம் வட்டத்தில் இல்லை. எனினும் வேலூருக்கு வட மேற்கில் ஏறத்தாழ நான்கரைமைல் தொலைவில் “கொண் டாமூர்” என்றும், அதற்கு வடமேற்கில் மூன்றரை மைல் தொலை வில் சிற்றாமூர் என்றும், அதற்கும் வடமேற்கில் மூன்று மைல் தொலைவில் “நல்லாமூர்’” என்றும் மூன்று ஊர்கள் உள்ளன. நல்லாமூருக்குச் சிறிது வடகிழக்கில் ஆறு மைல் தொலைவில் கிடங்கில் அமைந்துவன து. “ஆமூர்” என்று பெயருடன் ஊர் இல்லாமையாலும் சிறுபாணன் கூறியபடி இந்த நல்லாமூரே கிடங்கலுக்கு அண்மையில் இருப்பதாலும், அந்தப் பாணன் கூற்றுப்படி, வேலூருக்கும் இந்த நல்லாமூருக்கும் இடையில் மருதவளம் காணப்படுவதாலும் இந்த நல்லாமூரே சங்ககால ஆமூராய் இருந்திருக்கலாம். என்று கொள்வது பொருத்தமாகும். ஆமூர் முதலி என்ற ஒரு வள்ளல் இவ்வூரினா் என்றும், இவரைக்.காளமேகப் புலவர் பாடினார் என்றும், அவ்வாறு பாடும்பொழுது பாதி வெண்பா பாடிய உடனேயே அவ்வள்ளல் பரிசளித்தார் என்றும் ஒரு செய்தி கூறப் பெறுகிறது.
“மருதஞ் சான்ற மருதத் தண்பணை
அந்தண ரருகா வருங்கடி. வியனகர்
அந்தண் இடங்கின் அவன் ஆமூரெய்தன்” (பத்துப். சிறுபாண், 186 188).
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம் பெறு சுடர்நுதல் தேம்ப” (ஐங்குறு, 56:2 3)
“கொடுமுடி காக்கும் குரூ உக்கண் நெடுமதில்
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும்
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர்” (அகம்.15918 20)
“ஆமூர் கவுதமன் சாதேவனார் பாடியது.
இன்கடுங் சஈள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பு ஓதுங்கின்றே; ஒருகால்”
வருதார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே.. (புறம்.80:1 4)