திருவாமாத்தூர் என்ற பெயரில் தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ளது இவ்வூர். விழுப்புரத்திற்கு மேற்கே நான்கு கல் தாலைவில் உள்ள இவ்வூர் பெயர்க் காரணத்திற்குப் புராணத்தைச் சுட்டுகின்றனர் முன்னோர். காமதேனு நந்தி பசுக்கள் எல்லாம் மற்ற விலங்குகளின் தாக்குதலை எதிர்க்க வேண்டி இறைவனைப் பல வருஷங்கள் தவம் கிடந்து கொம்பு பெற்றன என்று கூறும் தலபுராணம். அதனால் தான் இந்த தலத்துக்குத் தாயூர் என்றும் ஆமாத்தூர் என்றும் பெயர் வழங்கியிருக்கிறது. இதனையே கோமாதுருபுரம் எனப் புராணம் விவரித்துக் கூறுகிறது என்றும் கேள்விப்படுகின்றோம். உயிர் களுக்கு, பசுச்களுக்குத் தாயாக இறைவன் அருளும் தலம் என் கூற்றும் உண்டு. எனவே புராணக்கதைகளும் பல வழங்குகின்றதைப் பார்த்தால், இவ்வூர்ப் பெயருக்கு அவரவர் சமய விருப்பம் போன்று பெயர்க்காரணம் சுட்டுகின்றனரே தவிர, உண்மைக் காரணம் வேறாகத்தான் இருக்கவேண்டும் என்பதையுணர இயலுகிறது. ஆமா பசுக்கள் நிறைந்த இடம் என்ற நிலையிலும் இப்பெயர் வந்திருக்கலாம் ஆமா + ஊர் – ஆமாவூர் – ஆமாத் தூர்.தேவார மூவர்களாலும் பாடல் பெற்ற சிறப்புடையது இவ்வூர். இங்குள்ள சிவன் கோயில் பழமையும், சிறப்பும் பொருந்தியது என்பதனை அறியும்போது ஊரும் பழமை கொண்டது என்பதை உணர முடிகின்றது.