காவிரிக் கரையில் காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தலம். ஸ்ரீரங்கம் பக்கத்தில் உள்ளது திருவானைக் காவல் என்ற பெயருடன் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ளது. ஆனை + கா என்பதற்குப் பொருள் ஆனைகள் நிறைந்த சோலை என்பது. இப்பெயர் பின்னர் இங்குள்ள இறைச் சிறப்பும் கோயில் சிறப்பும் செல்வாக்கு பெற, பிறிதொரு பெயர்க் காரணத்தையும் கொள்கிறது. இங்கு முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்த மாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுப்பிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டு இருந்த பகையை மறக்காமல் யானைமீ. ஏற்இயலாதமாடக் கோயில்களாக எழுபது கட்டுகிறான். மேலும் இக்கோயில் தல மரமாகிய வெண் நாவல் காரணமாக தலத்தை ஜம்புகேஸ்வரம் என்றும் சுட்டுகின்றனர். ( ஐம்பு – நாவல் ) சம்பந்தர்சுந்தரர் பாடலும் இத்தலத்திற்கு உண்டு. மேலும் இங்குள்ள கோயிலின் பழமையைத் திருநாவுக்கரசரின்
ஆச்சிராமம் நகரும் ஆனைக்காவும்
முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னை
என்ற குறிப்பு சுட்டுகிறது. ( 236-4) கோயில் பழமையுடன், இக்கதைப் பழமையையும் இவ்விலக்கியச் சான்றுகள் காட்டுகின்றன.
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தல் செய்து
உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணனுமாக
கலந்த நீர் காவிரி சூழ் சோணாட்டு சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டானாரே திருவானைக் காவிலோர் சிலந்திக்கு அந்நாள்.
கோச் சோழர் குலத்தரசு கொடுத்தார் போலும் திருநா – 289-8
நிலையிற் பெருகுந் தரு மிடைந்த நெடுந்தண் கான
மொன்றுளதால் பெரிய. 74-1
அப்பூங்கானில் வெண்ணாவல் அதன் கீழ் முந்நாளரி
தேடும்
மெய்ப்பூங் கழலார் வெளிப்படலும் மிக்க தவத்தோர்
வெள்ளானை
கைப்பூம் புனலும் முகந்தாட்டிக் கமழ் பூங்கொத்து
பணிந்திறைஞ்சி
மைப்பூங் குவளைக் களத்தாரை நாளும் வழிபட்
டொழுகுமால் 74-2
ஆன செயலால் திருவானைக்கா என்றதற்குப் பெயராக 74-3.
அப்பர் சுந்தரர் ஞானசம்பந்தர் தவிர, பரணதேவ நாயனார் சிவபெருமான் திருவந்தாதியிலும் (20) ஐயடிகள் காடவர்கோன் க்ஷேத்திரத் திருவெண்பாவிலும் (11) இவ்வூர் பற்றிய சுட்டு தலைக் காண்கின்றோம்.