‘ஆனின் னகரமும் அதனோ ரற்றே, நாள்முன் வரூஉம் வன்முதல் தொழிற்கே’ –
(எ. 125) உம்மையை இரட்டுறமொழி- தலான் எதிரது தழீஇய தாக்கி, இன்னின்
னகரமும் நாள் அல்லவற்று முன் வரும் வன்முதல் தொழிற்கு அதனோரற்று எனக்
கொண்டு, ‘பனியிற் கொண்டான்’ முதலியன கொள்ளப் படும்.
இன்னின் னகரம் றகரம் ஆதற்கு இது பயன்படுகிறது. (தொ. எ. 125 இள.
உரை)
“உம்மை இறந்தது தழீஇயது ஆக்கி” என்பர் நச். (தொ.எ. 124 உரை)