ஆடுதுறை என்ற ஊர்ப்பெயர் மாசாத்தனார் என்ற சங்க காலப் புலவர் பெயரோடு சேர்த்துக் கூறப்பட்டுள்ள து. சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை, அவன் இறந்த பொழுது வருந்தி ஆடுதுறை மாசாத்தனார் (புறம், 227 பாடியுள்ளார். காவிரியாற்றின் வடக்கிலொன்றும், தெற்கி லொன்றும் வடவெள்ளாற்றங் கரையிலொன்றும் ஆக மூன்று ஊர்கள் ஆடுதுறை என்னும் பெயருடன் இருக்கின்றன. ஆறுகளில் மக்கள் இறங்கி நீராடுதற்கேற்ற இடமாகிய துறை என்னும்பெயரை, ஆற்றையடுத்துள்ள ஊர்கள் பெற்றிருப்பதற்கு ஆடுதுறை என்னும் ஊர்ப்பெயர் ஒரு சான்று.