இன்றும் ஆக்கூர் என்று வழங்கப்படும் இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. மாடக்கோயில் கொண்ட இத்தலம் சைவர் பலராலும் பாடல் பெற்ற சிறப்புடன் திகழ்கிறது. ( திருநா – 255-6, 272-3, 283-7, திருஞான 178. பெரிய -திருஞா-536, திருநா -248 ) இவர்களின் பாடல்கள், இவ்வூர் வளத் தையும், சிறப்பையும் அறியத் துணைபுரிகின்றன. அவனியில் கீர்த்தித்தென் ஆக்கூர் என நம்பியாண்டார் நம்பி, தம் திருத்தொண்டர் திருவந்தாதியில் ( 42 ) சிறப்புலி நாயனார் பிறந்த ஊர்பற்றி பேசும் போது குறிப்பிடுகின்றார். தேர் மன்னும் மணிவீதிகளையுடையது இவ்வூர் என்பது சேக்கிழார் கூற்று ( 27-248-4 ). மேலும் தான் தோன்றி மாடம் வழங்கப்படும் இக்கோயிலின் இறைவன் சுயம்புலிங்கமாகக் கருதப்படுகின்றார். இக்கோயிலின் தொன்மையினை, தொல் கோயில் ( பதி -178-2 ) என்று சுட்டும் ஞானசம்பந்தர் குறிப்பும் தருகின்றது. மேலும், என்று
வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையான் மிக்கிருக்கு
தாளாளர் ஆக்கூரிற்றான் தோன்றி மாடமே ம்போது (திருஞான பதி 178-3 )
என்ற எண்ணத்தைப் பார்க்கு இவ்வூர்ப்பெயர்கள் காரணமும் புலனாவது போல் தோன்றுகிறது. அன்று வேளாளர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர் என்பது தெளிவான ஒன்று. இந்நிலையில் உணவு ஆக்கும் பணியில் ஈடுபட்ட இவர்கள் வாழ்ந்த அவர் காரணமாக ஆக்கூர் என்ற பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.