மூன்றாம் வேற்றுமைக்கண்ணும் ஐந்தாம் வேற்றுமைக்- கண்ணும் விளங்கச்சொல்லப்பட்ட ஆக்கத்தொடு கூடிய ஏதுச்சொல் ஏதுப்பொருண்மையை நோக்கும்நோக்கு ஒரு தன்மையது. இது காரக ஏது.எ-டு : வாணிகத்தின் ஆயினான், வாணிகத்தான் ஆயினான் – ஆன், இன்என்னும் இரண்டுருபுகளும் ஏதுப் பொருண்மைக்கண் ஒப்ப வந்தன. (தொ. சொ. 93நச். உரை)