‘ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கம்’: கருத்து வேறுபாடு

ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கமாம், கடு என்பது தனக்குரியமுதற்பொருளை (மரம்) உணர்த்தாது சினைப் பொருளை (காய்) உணர்த்தலின்.(தொ. சொ. 119. நச். உரை)ஆகுபெயர் எழுவாய்வேற்றுமையாய் இருத்தலேயன்றி ஏனைய வேற்றுமையும்ஏற்று நிற்றலானும், எழுவாய் வேற்றுமையாய் நின்றவழியும் அது பிறிதொருவேற்றுமைப் பொருட்கண் சென்று மயங்காமையின் வேற்றுமை மயக்கம்எனப்படாமையானும், ஆகுபெயர் எழுவாய்வேற்றுமை மயக்கம் ஆகாது என்ப (114சேனா. உரை).ஆகுபெயர் ஏனைய பெயர் போல எழுவாய் வேற்றுமையாய் அமைந்து பின் ஏனையவேற்றுமைகளையும் ஏற்பது.பொற்றொடி – பொற்றொடியை அணிந்தவள் – என இரண்டா வதன்பொருண்மைத்து.தொல்காப்பியம் – தொல்காப்பியனால் செய்யப்பட்டது – என மூன்றாவதன்பொருண்மைத்து.தண்டூண் – தண்டூண் ஆதற்குக் கிடந்தது – என நான்காவதன்பொருண்மைத்து.பாவை – பாவையினும் அழகியாள் – என ஐந்தாவதன் பொருண்மைத்து.கடு – கடுவினது காய் – என ஆறாவதன் பொருண்மைத்து.குழிப்பாடி – குழிப்பாடியுள் தோன்றியது – என ஏழாவதன்பொருண்மைத்து.இவ்வாறு வேற்றுமைப்பொருள் உள்வழியே ஆகுபெயர் ஆவது, பிறவழி ஆகாதுஎனக் கூறியவாறு. (தொ. சொ. 117 நச். உரை)முதலிற் கூறும் சினையறி கிளவியும், சினையிற் கூறும் முதலறிகிளவியும், பண்புகொள் பெயரும், இருபெயரொட்டும் ஆறாம் வேற்றுமைப்பொருள்மயக்கம்; பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருள்மயக்கம்;இயன்றது மொழித லும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருள் மயக்கம். இவ்வாறு ஆகுபெயரை வகைப் படுத்துவார்தெய்வச்சிலையார். (தொ. சொ. 112 தெய். உரை)ஆகுபெயரின் ஒரு கூறு அன்மொழித்தொகை என்பது. இருபெயரொட்டாகுபெயர்அன்மொழிப் பொருள்மேல் நின்ற இருபெயரொட்டு ஆகும் பொற்றொடி போல்வனஎன்பர், இளம்பூரணரும் சேனாவரையரும் பழைய உரைகார ரும். கல்லாடர்,“பொற்றொடி என்பது படுத்தலோசைப் பட்ட வழி அன்மொழித் தொகையாம்;எடுத்தலோசைப் பட்டவழி ஆகுபெயராம்” என்பர். தெய்வச்சிலையார், “இருபெயரொட்டு என்பது இரண்டு பெயர் தொக்கு ஒருசொல் நீர்மைப்பட்டு மற்றொருபொருட்பெயராகி வருவது; அது ‘துடியிடை’ என்பது. துடிநடுப்போன்றஇடையினையுடை யாளைத் ‘துடியிடை’ என்ப ஆதலின் ஆகுபெயர் ஆயிற்று. இஃதுஉவமத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையன்றோ எனின், ஆகுபெயராவதுஒட்டுப்பட்ட பெயரோடு ஒற்றுமைப்பட்டு வரும்; அன்மொழித்தொகை யாவதுஅப்பொருளின் வேறுபட்டு வரும். அன்னது ஆதல் அன்மொழித் தொகை என்பதனானும்விளங்கும். ‘தாழ்குழல்’ என்றவழி, அதனை உடையாட்குப் பெயராகி வருதலின்ஆகு பெயராயிற்று. இது வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையன்றோ எனின், ஆண்டு எடுத்தோதாமை யானும், பொருள் ஒற்றுமைப்படுதலானும் ஆகாது என்க.” என்பர். (துடியிடை, தாழ்குழல் – போன்றதொடர்களில், சினையாகிய இடை குழல் – முதலியவற்றின் ஆகுபெயர்ப் பொருள்அவற்றின் முதலாகவே வரும் ஆதலின், தெய்வச் சிலையார் இவற்றை ஆகுபெயர்என்றார். வினைத்தொகை உவமத்தொகைப் புறத்து அன்மொழித்தொகை பிறக்கும்எனத் தொல்காப்பி யனார் கூறவில்லை.)நச்சினார்க்கினியரும் சிவஞான முனிவரும் இருபெய ரொட்டு ஆகுபெயர்வேறு, அன்மொழித்தொகை வேறு என்னும் கருத்தினர். (தொ. சொ. 115 நச்.உரை.)சேனாவரையர், “இருபெயரொட்டினை ஆகுபெயர் ஆதல் காரணத்தான் ஆகுபெயர்வகையில் கூறினார்; அன்மொழித் தொகையாதல் காரணத்தான் தொகையதிகாரத்தில்கூறினார்” என்றார். (தொ. சொ. 114 சேனா. உரை)