அகரக்கூறும் உகரக்கூறும் கலப்பதால் ஒகரம் பிறத்தல் உண்மையே
யாயினும், வடமொழியில் அது தெற்றெனப் புலனாதல் போலத் திராவிடமொழிகளில்
புலனாதல் இன்மை யின், அது கூறிப் பயனின்று. கங்
கா +
உதகம் = கங்
கோதகம் என வடமொழிச்சந்தியில்
அகரமும் உகரமும் ஓகரமாதல் தெளிவு. வடமொழியில் சேர்க்கையின் நொய்ம்
மையால், ஓகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கை
யின் திண்மையால் ஒ, ஓ எனக் குறில் நெடில் இரண்டும்
உளவாயின.
அகரமும் உகரமும் கூடித் தமிழில் ஒளகாரம் போல ஒலிக்கும்.
ஒளவை –
அஉவை
பௌர –
பஉரோ, கௌரவ –
கஉரவோ எனப் பாகதத்திலும் இதனைக்
காணலாம். தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, ஒளர –
அவுர, ஒள –
அவு எனவரும். கன்னடத்திலும் இவ்
வாறே தௌதலே –
தவுதலே, கௌகுழ் –
கவுகுழ் எனவரும். எனவே,
பாகதத்திலும் தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒளகாரத்திற்குப்
போலியாக
அஉ வரும் என்க.
தொல்காப்பிய மொழிமரபில் கூறப்படும் இப்போலி யெழுத் தமைப்பினை, அஉ
என்பனவற்றின் சந்தியக்கரம் ஒள எனக் கூறல் பொருந்தாது. (எ. ஆ. பக். 57,
58, 59)