அ இ உ முதல் தனி வருதல்

அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன்கண் அகரம் போலப் பின்
எழுத்துக்களொடு தொடர்ந்துநின்று ஒரு பொருளை உணர்த்தாது, மலையன்
என்பதன்கண் பகுதிபோல வேறுநின்று சுட்டுப்பொருள் உணர்த்தலின், அகத்து
வரும் இதனையும் ‘தனிவரின்’ என்றார். (இவ்வாறே இகரஉகரங் களுக்கும்
கொள்க.) (நன். 66 சங்கர.)