அ, இ இணைந்து இசைத்தல்

அகரமும் இகரமும் சேர்ந்து எகரமாக ஒலிக்கும் என்பர் வடநூலார்.
எகரத்தில் உள்ள கூட்டம் வடமொழியில் போலத் தமிழ்மொழியில் அத்துணைத்
தெளிவாதல் இல்லை. வடமொழியில் உப + இந்த்ர = உபேந்த்ர முதலிய சொற்களின்
சந்தியில் புணர்ச்சி தெளிவாதல் போலத் தமிழ்மொழியில் தெளிவாகக்
காண்டற்கு இல்லை. சேர்க்கையினது நொய்ம்மை யால் வடமொழியில்
ஏகாரத்திற்குக் குறில் இலதாயிற்று. தமிழ்மொழியில் சேர்க்கையின்
திண்மையால் எ, ஏ என்ற குறில்நெடில் வேறுபாடும் உளதாயிற்று. (எ. ஆ.
பக். 8).
தமிழில் எகரம், இகரம் பிறக்குமிடத்தே பிறப்பது ஆதலா னும்,
இகரஒலியின் திரிபு ஆதலானும், ‘அஇ – எ’ என்ற அமைப்புத் தமிழிற்குப்
பொருந்தாது. (எ. ஆ. பக். 7).
அகரமும் இகரமும் கூடி ஐகாரம் போல ஒலிக்கும். தமிழில் அஇவனம் என்பது
ஐவனம் போல ஒலிக்கும். பாகதத்தில் தைத்ய – தஇச்சோ, சைத்ர – சஇத்தோ,
பைரவ – பஇரவோ எனவரும்.
தெலுங்கில் உடம்படுமெய் பெற்று, கை – கயி, ஐது – அயிது எனவரும்.
கன்னடத்திலும் இவ்வாறே பாரயிஸிதம் – பாரை ஸிதம், தேரயிஸிதம் –
தேரைஸிதம், கோரயிஸிதம் – கோரை ஸிதம் என வரும். தமிழிலும் இவ்வாறே
வைத்தியன் – வயித் தியன் என வரும்.
எனவே, தமிழிற்போலப் பாகதம், தெலுங்கு, கன்னடம் என்ற மொழிகளிலும்
ஐகாரத்திற்குப் போலியாக
அஇ வருமாறு
உணரப்படும்.
ஐ என்பது அஇ என்பனவற்றின் சந்தியக்கரம் என்று கூறுதல் பொருந்தாது.
மொழியிடைப்பட்ட எழுத்துக்களின் இயல்பு கூறும் தொல்காப்பிய மொழிமரபில்
இச்செய்தி கூறப்பட் டிருத்தலின், இது தனியெழுத்தின் இயல்பு
கூறுவதன்று. (எ, ஆ. பக். 57, 58)