அ ஆ – என்பன இரண்டற்கும் தானம் – கண்டம்; முயற்சி – அங்காத்தல்;
பொருள் – அங்கு ஆங்கு என்றல் முதலாக வருதல்;வடிவு – அ ஆ – என்ற
வரிவடிவு; இவ்வாறு மாத்திரை ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம் ஆயின.
க ங – என்பன இரண்டற்கும் முயற்சி – அடிநா அடியண்ணம் சேர்தல்; அளவு
– தனித்தனி அரை மாத்திரை; பொருள் – குளக் கரை, குளங்கரை – என்றல்
முதலாக வருதல்; இவ்வாறு தான மும் வடிவும் ஒழிந்தன ஒத்திருத்தலால் இனம்
ஆயின. (நன். 72 இராமா.)