அவ்வியய தத்திதன்

இடைச்சொற்கள் அடியாக வந்த பெயர்ப் பகுபதங்கள்: 1. அவ்வீடு – அந்தவீடு – இந்நாடு – இந்த நாடு – எனச் சுட்டுப் பெயர்கள் பிளந்துநின்றாற்போல நில்லாது வந்த இடப்பெயர்த் தன்மைப்பட்டஇடைச்சொற்களும்,2. எண் முதலியவை ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்துவனவும்தமிழுக்கு அவ்வியய தத்திதன் ஆகும்.எ-டு : 1. ஆங்குக் கொண்டான், ஆன்(ற்) கொண்டான்,ஈன்(ற்) கொண்டான்ஆங்கு : சுட்டாகும் முதலெழுத்து நீண்ட சொல். ஆன், ஈன் : அகரஇகரங்களை அடியாகக் கொண்டு திரிந்த சொற்கள்.அவ்வயின், இவ்வயின், எவ்வயின் (வினா); அங்கண், இங்கண், அவ்வாய்,ஆயிடை – இவை இடப்பொருள் உணர்த்தும் (ஏழாம் வேற்றுமை) இடைச்சொல்லானதத்திதம்.யாங்கு, யாண்டு, எங்கு – என்பனவும் அன்ன.2. ஒருவயின், இருவயின், பலவயின்; இவை எண்ணோடு இயைந்து இடப்பொருளைஉணர்த்துவன.வடாஅது (வேங்கடம்), தெனாஅது (குமரி), குணாது, குடாஅது – எனத்திசைப்பெயர்களும், ‘அணித்தோ சேய்த்தோ’ (புறநா. 173) எனப் பண்புப்பெயர்களும் அடியாக வந்த விகுதி ஏற்றவினைக்குறிப்புப் பெயரெல்லாம் தத்திதனே ஆம்.வடமொழியில் யத்திர (எவ்வயின்) தத்திர (அவ்வயின்) அத்திர(இவ்வயின்), யத : (எதனால்) தத : (அதனால்) இத : (இங்கு) – என வினாவும்சுட்டுமாக வருவனவற்றை விவட்சி தார்த்தம் (சுட்டிக் காட்டவிரும்பியவற்றைப் பொருளாக உடையன) என்பர்.அப்பொருள் இப்பொருள் இக்கொற்றன் – போல்வன சுட்டும் பெயருமாகத்தொக்க தொகைநிலைச் சொற்களாம்; தத்திதன் ஆகா. (பி.வி. 33)(இடைச்சொற்கள் இங்ஙனம் அவ்விய தத்திதாந்த பதம் எனக் கூறப்படுதல்அனைவர்க்கும் உடன்பாடானதன்று. தமிழுக்கு இது புதுமை. வீரசோழியம்இவற்றைத் தத்திதன் என்று கூறவில்லை. இலக்கணக் கொத்து இவற்றை இப்பொருளுணர்த்தும் வினாச்சுட்டு எண் பெற இடைச்சொல்லாகவே எழுந்து நின்றன எனவிளக்கி, இவற்றைப் பகுபதம் எனக் காட்டி, யாண்டு யாங்கு எங்கே எங்கண்எவண் எங்ஙனம் யாங்ஙனம் – எனவும், ஆன ஈன அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்குஊங்கு அவண் இவண் உவண் அம்பர் இம்பர் உம்பர் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் -எனவும் உதாரணமும் காட்டியுள்ளது.)