இஃது இடைச்சொல்தொகை. அவ்வியம் என்பது, ஆண் பெண் அலி என்னும்வடமொழிச்சாத்திரலிங்கங்கள் (பால்) மூன்றிலும் ஒன்று போன்றதாய்,வேற்றுமைகளுக்கும் பொது வாய், வேற்றுமைப் படாததாய், ஒருமை இருமை பன்மைஎன்னும் மூன்றிலும் மாறுபடாததாய் வரும் சொல் – என்பது வடமொழிமரபு.தமிழில் இடைச்சொற்களும் அவ்வியயங்களைப் போல வருதலைக் கருதிப்பி.வி. நூலார் இடைச்சொல் முன்னும் பின்னும் வரும் தொடர்களை அவ்வியயீபாவ சமாசம் எனக் கொள்கிறார். உண்மையில் அத்தொடர்கள் தொகாநிலை யாகவேநிற்கின்றன. தொல்காப்பியனாரும் இடைச்சொல் ‘முன்னும் பின்னும்மொழியடுத்து வருதல்’ உடைத்தென்றே கூறுவார். இஃது இருவகை கொண்டது, 1.முன்மொழிப் பெயர் 2. பின்மொழிப் பெயர் – என.எ-டு : வாள்மன், அதுமன்; மற்றைஆடை, கொன்னூர் – என முறையே காண்க(பி. வி. 23)