பிறப்பிடம் : கங முதல்நா முதல்அண்ணம், சஞ – இடைநா இடையண்ணம், டண –
நுனிநா நுனியண்ணம் – என இவை உறப் பிறக்கும்.
கங, சஞ, டண என்பவற்றிற்குப் பிறப்பிடமும் முயற்சியும் மூவகையினவே;
ஆயின் மெல்லெழுத்தின் பிறப்பிற்கு மூக்கொலி துணை செய்யும் என்ற ஒன்றே
வேறுபாடு. ஆதலின் க முதல்நாவிலும் ங முதல் அண்ணத்திலும் பிறக்கும்
என்றாற் போலக் கொள்ளற்க என்பது. (தொ. எ. 92. நச்.உரை)
‘முதல்நா அண்ணம்’ என்பது முதல்நாவொடு பொருந்திய அண்ணம் என்று
பொருள்படும். ‘இடைநா அண்ணம்’ முதலியவற்றுக்கும் இஃது ஒக்கும். (எ. கு.
பக். 93).