இரண்டு மாத்திரையவாகிய நெடில்கள் நீண்டொலித்தலை வேண்டும்போது
நீட்டத்துக்குத் தேவையான அளவு அந்நெடில்களுக்கு இன மொத்த குறில்களைப்
பிளவுபடாமல் கூட்டி அம்மாத்திரைகளை எழுப்புக. (தொ. எ. 6. இள. உரை)
வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் ஓசையும் பொருளும் பெறுதல் காரணமாக,
இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையின் மிக்கொலித்தலை
விரும்புவராயின், தாம் கருதிய மாத்திரையைக் தருதற்குரிய
எழுத்துக்களைக் கூட்டி அம்மாத்திரையை எழுப்புக. (நச். உரை)
நெடிலொடு குறிலும் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர் அப் பிளவுபடா
ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டி னார். இவை கூட்டிச் சொல்லிய
காலத்தல்லது புலப்படா, எள்ளாட்டியவழி அல்லது எண்ணெய் புலப்படா வாறு
போல என உணர்க. (நச். உரை)
(எழு : தன்வினை; எழூ
உ : பிறவினை – அளபெடை பொருள்
வேறுபாடு தந்தது.)
தமிழிலக்கியங்களில் அளபெடையை அசைநிலையாகச் சில இடங்களில்
கொண்டமையானும், நெட்டெழுத்தை இரண் டெழுத்தாகக் கொண்டு இரண்டசைகளாகக்
கொள்ளாமை யானும் இவ்வாறு கூறினார். (எ.கு. பக். 15)