‘அவை முதலாகிய பெண்டு என் கிளவி’

சுட்டினை முதலாகவுடைய அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி – எனப்பெண்டாட்டி என்னும் பொருண்மை உணர வரும் பெயர்ச்சொற்கள். (பெண்டாட்டி -பெண்). உயர்திணைப் பெயர்களாக மூன்று நூற்பாக்களால் குறிக்கப் பட்டபெயர்களுள் இவையும் சில. (தொ. சொ. 166 கல். உரை)உயர்திணைப் பெயர்களில் அருகி வழங்கும் பெயர்களில் இவைகுறிக்கப்படுகின்றன. அவை என்றது, சுட்டு மூன்றனை யும். வருமாறு :அப்பெண்டு இப்பெண்டு உப்பெண்டு.‘பெண்டன் கிளவி’ பாடமாயின், அவ்வாட்டி இவ்வாட்டி உவ்வாட்டி -என்பனவும் ஆம். (தொ. சொ. 165 நச். உரை)