சுட்டு முதலாகிய பெண்தன் கிளவி என்பது, சுட்டுக்களை முதலாகக்கொண்டு பெண்மை பற்றி வரும் பெயர்ச்சொற் களாம். அவை அன்னள் இன்னள்அன்னாள் இன்னாள் – என வரும்.அன்னள் – அன்னாள் – ஒப்பொடு வரும் கிளவி ஆகா. அன்ன என்பதேஉவமக்கிளவியாதலின் அன்னவள் என்றே அவை வருதல் வேண்டும். பிறவும்‘சுட்டுமுத லாகிய அன்னும் ஆனும்’ என்பதனுள் காண்க. (தொ. சொ. 164 ச.பால.)