நன்மக்களிடைக் கூறத்தக்கன அல்லாத சொற்கள். இவற்றை அவ்வாய்பாட்டைமறைத்துப் பிற வாய்பாட்டான் கூறல் வேண்டும். அங்ஙனம்மறைக்குமிடத்தும், தொன்றுதொட்டு வழங்கி வருவனவற்றை மறைத்துப் பிறவாய்பாட்டான் கூறுதல் வேண்டா. இங்ஙனம் மறைத்துக் கூறுதல் தகுதிஎனப்படும்.எ-டு : ‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’ (எ. 233) – ஈகார பகரத்தை ஓர் உயிர்மெய்யெழுத்தாகக் கூறின் அவையல் கிளவியாம். அதையே உயிரும் மெய்யு மாகப் பிரித்து வேறொருவாய்பாட்டான் கூறின் அமை வுடைத்தாம்.கண்கழீஇ வருதும்; கால்மேல் நீர்பெய்து வருதும், கை குறிய ராய்இருந்தார், பொறை உயிர்த்தார், ‘புலிநின்று இறந்த நீர்அல்ஈரத்து ’ (நற். 103), கருமுக மந்தி, செம்பின் ஏற்றை – இவை இடக்கரடக்கிக்கூறியன.ஆப்பி, யானை இலண்டம், யாட்டுப் பிழுக்கை – என்பன மருவி வந்தமையின்கொள்ளப்பட்டன.(தொ.சொ.443 சேனா. நச். உரை)