அவையல் கிளவியாவது இழிந்தோர் கூறும் இழிசொற்களை நன்மக்களிடைமறைத்துக் கூறுதல்; மறைத்துக் கூறாக்கால் வழுவாம். தகுதியாவது‘செத்தான்’ எனப் பெரும்பான்மை வழங்கப்பட்டதைத் தகுதி நோக்கிச்சிறுபான்மை ‘துஞ்சி னான்’ என வழங்குதல். செத்தான் என வழங்குதலும் வழாநிலையேயாம். இஃது இரண்டற்கும் இடையே வேற்றுமை. (தொ. சொ. 442 நச்.உரை)