இயற்கை – சாரியை பெறாது முடிதல்; செயற்கை – செய்கை. நெட்டெழுத்தை
அடுத்து வரும் குற்றியலுகர ஈற்றுச்சொற்கள் உருபுகளை ஏற்குமிடத்துப்
பொதுவிதிப்படி இன்சாரியை பெறாது, (இனஒற்று அடுத்து) இயல்பாக முடியும்
செய்கையை யுடையன.
எ-டு : காடு + ஐ
> காட்டு + ஐ =
காட்டை
ஆறு + ஐ
> ஆற்று + ஐ =
ஆற்றை
குற்றியலுகரம் மெய்யீறு போல உயிரேற இடங்கொடுத்து முடிந்தவாறு.
கவடு + ஐ
> கவட்டு + ஐ =
கவட்டை
முயிறு + ஐ
> முயிற்று + ஐ =
முயிற்றை
என, உயிர்த்தொடர்களையும் உரையாசிரியர்கள் கொண்ட னர். (தொ. எ. 197
நச்).