அவிநாசி

இன்று அவிநாசி என்று அழைக்கப்படும் ஊரின் பழம் பெயர் புக்கொளியூர். கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் நாமமே அவிநாசி. இன்று ஊருக்கே அவ்விறைப்பெயர் அமைந்து வழங்கிவருகிறது. ஊழிக் காலத்தும் விநாசமின்றி இருப்பதால் புக்கொளியூரனுக்கு அவி நாசியப்பர் என்று பெயர். நாசம் எனில் கேடு. விநாசம் எனில் பெருங்கேடு என்று அவிநாசி என்ற ஊர்ப்பெயர் விளக்கம் சொல்கின் றனர் “. கொல்லி நாட்டில் உள்ள இவ்வூரின் பழம் பெயருக்குரிய காரணம் தெரியவில்லை. மேலும், காசி விசுவேசுவரிடம் இருந்து ஒருவேர் கிளைத்து ஓடி அவிநாசியப்பராய் முளைத்ததென்று தலபுராணம் மொழியும் என்றும் திருப்புக் கொளியூர் முதன் முதலில் கோயிலுக்கும், குளத்திற்கும் தென்பால் இருந்தது. மறைந்த அவ்வூரின் பெயர் புக்கொளியூர் நத்தம் இப்போது காணப்படுகிறது. என்ற எண்ணத்தைக் காணும்போது புக்கொளியூர் என்ற பெயர் புக்கொளியூர் நத்தம் என்ற பெயர் அடைந்து, அவ்வூர்ச் சிறப்பு குன்றி, அதன் ஒரு பகுதியாக இருந்த கோயிற் பகுதியே இறைப்பெயரால் செல்வாக்கு பெற்று இன்று திகழ்கின்றது எனக் கருதலாம். மேலும் புக்கொளியூர் என்னும் பகுதி தற்போது வெட்டவெளியாக உள்ளது. அருகில் ஏரி உள்ளது என்ற கூற்றும், இப்பகுதி சிறப்பிழந்து விட்டமையைக் காட்டும் எனினும் புக்கொளியூருக்குரிய தோற்றக் காரணம் தெரியவில்லை. இவ்வூர், தேவார மூவராலும் பாடப்பெற்ற சிறப்புடையது. திருநாவுக்கரசர் அவிநாசி கண்டாய் ( பதி287-7 ) என்று இறைவனைக் குறிப்பிடுவது இப்புராணக் கதையுண்மையைப் புலப்படுத்துகின்றது.