வேட்கை என்பது நிலைமொழியாக, அவா என்பது வரு மொழியாகப் புணரும்
வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வேட்கை + அவா = வேணவா என்று
புணரும். வேட்கை + அவா
> வேட் + அவா
> வேண் + அவா = வேணவா.
வேட்கை. யான் தோன்றிய அவா என்பது பொருள். வேட்கையாவது பொருள்கள்மேல்
தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டும் என
மேன்மேல் நிகழும் ஆசை. வேட்கையும் அவாவும் என அல்வழிப் புணர்ச்சி
கொள்ளினும் ‘வேணவா’ என்ற முடிபு ஒக்கும். (தொ. எ. 288 நச்.
உரை)
வேள் + அவா
> வேண் + அவா = வேணவா என
முடிந்தது. ஆள் – ஆண் எனவும், எள் – எண் எனவும் திரிந்தாற்போல, வேள் –
வேண் எனத் திரிந்து புணர்ந்தது எனலாம். (எ. ஆ. பக். 148)