அவாய்நிலை

தொடர்மொழிக்கண் நிலைமொழியும் வருமொழியும் இணைதற்குரிய திறங்களுள்அவாய்நிலை என்பதும் ஒன்று. (தொ. சொ. 1 சேனா. உரை) (இ. வி. 161)அவாய் நிலையாவது ஒரு சொல் தன்னொடு சேர்ந்து பொருள் முடித்தற்குரியமற்றொரு சொல்லை அவாவி நிற்பது. ‘ஆ நடக்கின்றது’ என்புழி, ஆ என்னும்நிலைமொழி நடக்கின்றது என்னும் வருமொழியை அவாவிநின்று, ஆ நடக்கின்றதுஎன்னும் தொடர்மொழியாகிப் பொருள் நிரப்புகிறது.