அழுந்தை திதியன் என்பவனுக்கு உரியதராய் இருந்தது. அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பெண்ணின் நலம் பாராட்டப் பெறும்பொழுது இவ்வூர் உவமையாகக் கூறப் பெற்றுள்ளது. கழக உரையாசிரியர் இதற்கு அழுந்தூர் என்று பொருள் கூறுவதைக் காணும்பொழுது அமுந்தை என்பது பின்னர் அழுந்தூர் என்று வழங்கியதை உணரலாம். கம்பன் பிறந்த இருவழுந்துரர் எனக் கருதலாம்.
கடுந்தோ்த் திதியன் அழுந்தை. கொடுங்குழை
அன்னி மிஞீிலியின் இயலும்
நின் நலத்தருவியை முயங்கிய மார்ப. (அகம் 196;11 13)
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே” (௸ 246;12 14)