அழுந்தூர்

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து வாழும் புகழ்மிகு தலம் அழுந்தூர். மாயவரத்துக்குத் தென்கிழக்கில் இப்பகுதி உள்ளது. தஞ்சாவூர் மாவாட்டத்தைச் சார்ந்தது. மட்டுமன்றி திருமங்கை ஆழ்வாராலும் ஞானசம்பந்தர், நாவுக்கரசர் இருவராலும் பாடல் பெற்ற இத்தலம், அழுந்தை எனவும் வழங்கப்பட்டுள்ளது. சோழ நாட்டு இத்தலத்தைத் தேரழுந்தூர் என்ற பெயராலும் குறித்துள்ளனர். இன்றும் இப்பெயரே அமைகிறது. இப்பெயர்க் காரணத்திற்கு ஒரு புராணக் கதைக் காரணமாக அமைகிறது. எனினும் இப்புராணக்கதைப் பின்னர் எழுந்ததோ என்றதொரு எண்ணம் இப்பெயராய்வில் எழுகின்ற ஒன்று. அழுந்தூர் என்றும் திரு அழுந்தூர் என்றும் இலக்கிய ஆட்சிகள் இவ்வூரைக் குறிக்கின்றறன.
அலைபுனல் திரு அழுந்தூர் மாடக்கோயில் அடைந்தோர்’ (பெரிய-434)
அழுந்தூர் உள்ளார் திருஞா- 265-8
அழுந்தை மறையோர்
வழிபாடு செய் மாமாடமன்னியே திருஞா. 156-1
கல்வெட்டிலும் இவ்வூர் செயங்கொண்ட சோழநாட்டுத் திரை மூர் நாட்டு திரு அழுந்தூர் ” என குறிக்கப்படுதலைக் காண்கின் றோம். எனவே முதலில் அழுந்தூர் எனவும் அழுந்தை எனவும் குறிக்கப்பட்ட இவ்வூர், பின்னர் இங்குள்ள கோயில், சிறப்பு பெற்ற பின்னர் திருஅழுந்தூர் என்றாகிப் புராணக் கதையின் செல்வாக்கு காரணமாக, தேர் அழுந்தூர் எனப் பெயர் பெற்றிருக்க வாய்ப்புண்டு. மேலும் சோழநாட்டைச் சார்ந்த இத்தேரழுந்தூர் தான் சங்க கால இலக்கியங்கள், சுட்டும் அழுந்தூர், அழுந்தையா என்பதும் ஆய்வுக்குரியது. இடைக்காலத்தில் காணப்படும் இவ்விரு பெயர்களையும் சங்க கால இலக்கியங்களே சுட்டுகின்றன.
கடுந்தேர் திதியன் அழுந்தை – அகம் -196
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய
மொய்வலி அறுத்த ஞான்றை
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் – 246
பிற எண்ணங்கள் இவண் இல்லை. சைவ நிலையில் மட்டு மல்லாது வைணவ நிலையிலும், புராணக் கதை ஒன்று தேர் அழுந்தூர் என்ற ஊர்க்குரிய பெயர்க் காரணமாக கருதப்படுகிறது. உபரி சரவசு என்ற ஓர் அரசன். இவனிடம் இருந்த ஒரு தேர் வானவீதியில் உருண்டோடும் தன்மையது. இவன் தேவர் கட்கும் இருடிகட்கும் இடையில் எழுந்த வழக்கில் ஒரு தலைச் சார்பாகத் தீர்ப்புக் கூறியதில் முனிவர்கள் அவன் தேர் பூமி யில் அமுந்தட்டும் என்ன்று சாபமிட்டனர். அவர்கள் சாபம் இவ்வாறு பலித்தது. ஒரு சமயம் அவன் வானவீதியில் சென்ற பொழுது, இவ்வூர்த் திருமால் திருக்கோயிலுக்கு நேராக இவன் தேர் செல்ல நேர்ந்தது. இதனைச் சிறிதும் பொறுக்க இயலாத பெரிய திருவடி (கருடன் ) தம் மந்திர ஆற்றலால் தேரை இழுத்து பூமியில் அழுந்த வைத்து விடுகின்றார். என்பது அப்புராண வரலாறு. இவ்விரண்டு கதைகளையும் நோக்க தேரழுந்தூர் என்ற பெயருக்கு இணங்க கதையை அமைந்து இருக்கிறார்களே தவிர. அழுந்தூர் என்ற பெயருக்கு வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.