அழுங்கல் என்னும் உரிச்சொல் ஓசையாகிய இசையினையும், இரக்கமும்கேடும் ஆகிய குறிப்பினையும் உணர்த்தும்.எ-டு :‘உயவுப் புணர்ந்தன்றிவ் அழுங்கல் ஊரே’ (நற். 203) -ஓசை.‘அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே’(அக. 66) – இரக்கம்.‘குணன்அழுங்கக் குற்றம் உழைநின்று கூறும்’(நாலடி. 353) – கேடு. (தொ. சொ. 350 சேனா. உரை)