இவர் பாடிய 32 பாடல்களும் கலித்தாழிசையை ஒத்த ஒருவகைச் சிந்துஅமைப்பின. பாடல், நான்கு அடிகளும் தம்முள் அடியெதுகை பெற்று ஈற்றடிநீண்டிசைத்து ‘என் கண்ணம்மா’ என்ற தனிச்சொல் பெற்று வருகிறது; ஈற்றடிநீண்டிசைப்பதால் கலித்தாழிசை போல்வது. கலித்தாழி சையினின்றேபிற்காலத்துச் சிந்துயாப்புத் தோன்றியிருத்தல் வேண்டும் என்பர்.(இலக்கணத். முன். பக். 102, 103)