அழன் என்ற சொல் உருபேற்குமிடத்து அத்துச்சாரியையும் இன்சாரியையும்
தனித்தனிப் பெற்று முடியும்; ஒரோவழி இருசாரியைகளையும்
பெறுதலுண்டு.
வருமாறு : அழன் + அத்து + ஐ = அழத்தை; அழன் + இன் + ஐ = அழனினை;
அழன் + அத்து + இன் + ஐ = அழத்தினை
பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வருவழி னகரம் கெட்டு வருமொழி
வல்லெழுத்து மிக்கு, அழன் + குடம்
> அழ + குடம்
> அழக் + குடம் = அழக்குடம்;
அழன் + கொடி
> அழ + கொடி
> அழ + க் + கொடி = அழக்கொடி
– என முடியும். அழன் – பிணம், பேய். (தொ. எ. 193, 354 நச்.
உரை)