அளைமறி பாப்புப் பொருள்கோள்

வளையில் நுழையும் பாம்பு முதலில் தலையை நுழைத்துத் தலை உள்ளே செல்லவாலை இறுதியில் உள்ளே இழுத்துக் கொள்ளும்; உள்ளே உடலை வளைத்துத்திரும்பித் தலையை வெளியிலும் வாலை உள்ளுமாகக் கொள்ளும். அதுபோல,பாடலில் அமைந்த முறையிலுள்ள முதலடி இரண்டாமடி மூன்றாமடி நான்காமடிஇவற்றைப் பொருள் செய்யும்போது மாற்றி ஈற்றடியிலிருந்து பொருள் கொள்ளஅமையும் பொருள்கோள், வளையில் நுழைந்து உடலைத் திருப்பிக் கொள்ளும்பாம்பின் செய்கையையுடையதாகிய அளைமறிபாப்புப் பொருள்கோளாம். (யா. வி.பக். 391)அம்பொன் நீடிய அம்ப லத்தினில் ஆடு வாரடி சூடுவார்தம்பி ரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மைதரித்துளார்நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம்செய் தவத்தினால்இம்பர் ஞாலம் விளக்கி னாரிளை யான்கு டிப்பதி மாறனார்’ (பெரியபு.இளையான். 1)இப்பாடலைப் பொருள் செய்யும்போது, இம்பர் ஞாலம் விளக்கினார் ஆகியஇளையான் குடிப்பதி மாறனார், நம்பு வாய்மை நீடு சூத்திர நற்குலம் செய்தவத்தினால், தம்பிரான் அடிமைத் திறத்துயர் சால்பின் மேன்மைதரித்துளார்; அவர் அம்பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்- என ஈற்றடியினின்று முறையே முதலடிவரை இணைத்துப் பொருள் செய்யப்படுவதுஅளைமறி பாப்புப் பொருள் கோளாம்.