அளைமறி பாப்புப் பொருள்கோள்

செய்யுட்கண் ஈற்றில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்றபொருள்கோள் அளைமறி பாப்புப் பொருள் கோளாம். அளை மறி பாம்பு – புற்றிலேதலைவைத்து மடங்கும் பாம்பு. அது போலுதலால் இப்பொருள்கோள் அப்பெயர்த்தாயிற்று.எ-டு :‘தாழ்ந்த உணர்வினராய்த்தாளுடைந்து தண்டூன்றித் தளர்வார்தாமும்சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியில் சுழல்வார்தாமும்மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார் தாமும்வாழ்ந்த பொழுதினே வானெய்தும் நெறிமுன்னி முயலாதாரே.’இதனுள், ‘வாழ்ந்த……… முயலாதார்’ மூழ்ந்தபிணி…….முனிவார், சூழ்ந்த வினை ……. சுழல்வார், தாழ்ந்தஉணர்வினராய்…….. தளர் வார் – எனத் தலைகீழாய் ஈற்றடி இடையிலும்முதலிலும் சென்று கூடுதல் காண்க. (நன். 417 சங்.)