1. நிறுத்து அளத்தல் – கழஞ்சு முதலிய நிறைப் படிக்கற்களைத் தராசின்
ஒரு தட்டிலிட்டு, நிறுத்தறிய வேண்டிய பொருளை மறுதட்டிலிட்டு
நிறுத்தளத்தல்; 2. பெய்து அளத்தல் – எண்ணெய் முதலியவற்றை
அளவுகலன்களில் ஊற்றி அளத்தல்; 3. தெறித்து அளத்தல் – ஒன்றனை ஒலித்து
ஒலி யுண்டாக்கி அவ் வொலியைச் செவிகருவியாக அளந்து கோடல்; 4.
தேங்கமுகந்து அளத்தல் – நெல் முதலியவற்றை அளவுகலன்களின் மேல்
குவியுமாறு குவியுமளவும் பெய்தளத் தல்; 5. நீட்டி அளத்தல் – சாண்,
முழம் முதலிய நீட்டல் அளவைகளால் துணி முதலியவற்றை அளத்தல்; 6. எண்ணி
அளத்தல் – ஒன்று இரண்டு முதலாக எண்ணியளத்தல்; 7. சார்த்தி அளத்தல் –
ஒன்றன் அளவொடு மற்றொன்றன் அளவை ஒப்பிட்டு அளத்தல்; கண்ணிமைப்பொழுது,
கைந்நொடிப்பொழுது ஆகிய அளவைகளோடு எழுத்தின் அளவை ஒப்பிட்டளத்தல். (தொ.
எ. 7 நச். உரை)