க ச த ப ந ம வ அ உ என்பன, அளவுப்பெயர் நிறைப்பெயர் என்பனவற்றின்
மொழி முதலாகிய ஒன்பது எழுத்துக்களாம். அவை கலம் – சாடி – தூதை – பானை
– நாழி – மண்டை – வட்டி – அகல் – உழக்கு – என்ற அளவுப்பெயர்க்கண்ணும்,
கழஞ்சு – சீரகம் – தொடி – பலம் – நிறை – மா – வரை – அந்தை – முதலிய
நிறைப் பெயர்க்கண்ணும் காணப்படுவன. இப்பெயர்கள் அக்காலத்து வழங்கின
(தொல்காப்பியனார் கலம் (எ. 168), பனை (169), உழக்கு (457), நாழி, உரி
(240) பதக்கு, தூணி (239) என்ற அளவுப் பெயர்களையும் கா என்ற
நிறைப்பெயரையும் (169) நூற்பாக்களில் குறிப்பிட்டுள்ளார்). (தொ. எ.
170 நச். உரை)
இம்மி – ஓரடை – இடா – என்ற பெயர்களும், ஒரு ஞார் – ஒரு துவலி –
என்ற பெயர்களும் உரையாசிரியர்களால் கொள்ளப் பட்டன. (தொ. எ. 170
நச்.)
இம்மி – ஓரடை – ஓராடை என்பனவற்றை இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.
(தொ. எ. 171)