அளவழிச் சந்தப் பையுள்

அளவழிச் சந்தச் செய்யுளில் நான்கு அடியும் சீரான் ஒத்து,ஒவ்வோரடியும் வெவ்வேறு எழுத்து எண்ணிக்கை பெற்று வருவது. (அளவு + அழி= அளவழி)எ-டு : ‘என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்றுகன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவி யாரும்சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்சென்று துளங்க ஆங்கோர்கொன்னவில் பூதம் போலும் குறள்மகள் இதனைச் சொன்னாள்.’ (சூளா.679)இது முதலடி 15 எழுத்தாய், இரண்டாமடி 17 எழுத்தாய், பின்னிரண்டுஅடிகளும் 16 எழுத்தாய் வந்தமையால் அளவழிச் சந்தப் பையுள் ஆயிற்று.(எழுத்தெண்ணிக்கையில் புள்ளியெழுத்து விலக்குண்ணும்.)(யா. வி. பக். 518)