நான்கடியும் எழுத்தொத்து அலகு நிலை ஒவ்வாது வருவனவும், எழுத்தும்அலகும் தம்முள் இயையாது வருவனவும் ஆகிய இருவகை விருத்தமும்.எ-டு : ‘கொள்ளுங் கூற்றி னினைந்துணர் வுசிறிதுள்ள நிற்க வொழிந்திடு மாறுபோல்வள்ளல் தரள வனவ லையுளக்கள்வ ரைவரு மென்றே கரந்திட்டார்.’இது நான்கு அடியும் தம்மில் எழுத்து ஒத்து, அலகு ஒவ்வாதுவந்தது.எ-டு : ‘சொற்றவா வளவி னுளவா வெனுந்தடத்திற்றவா யில்லதெஞ் ஞான்று முள்ளதுசொற்றவாண் மனத்தினா லுறுவிப் பின்னரேமற்றவா னோக்கினான் மடங்கல் மொய்ம்பினான்.’இது நான்கடியும் தம்மில் எழுத்தும் அலகும் ஒவ்வாது வந்தது. (வீ.சோ. 139 உரை)