அளவடியில் கூன் வருதல்

அளவடிப் பாடல்களாகிய ஆசிரியம், வெண்பா, கலி இவற்றின்அடித்தொடக்கத்தில் சீர் கூனாக வரும்; ஆசிரியப் பாவின் இடையிலும்வரும்.எ-டு : ‘ அவரே , கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலைவாடா வள்ளியங் காடிறந் தோரே; யானே , தோடார் எல்வளை நெகிழ ஏங்கிப்பாடமை சேக்கையுள் படர்கூர்ந் திசினே’ (குறுந். 216)இஃது ஆசிரியப்பா அடித் தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘ உதுக்காண் , சுரந்தானா வண்கைச் சுவணமாப் பூதன்’: இது வெண்பாவின்அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘ உலகினுள் , பெருந்தகையார் பெருந்தகைமை பிறழாவே பிறழினும்’: இதுகலிப்பாவின் அடித்தொடக்கத்தே சீர் கூனாய் வந்தது.‘யானோ தேறேன் அவர் பொய்வழங் கலரே’. (குறுந். 21): இஃது ஆசிரியப்பாவின் அடி இடையில்அசை கூனாய் வந்தவாறு. (தொ. செய். 49, 48 நச்.)தொல்காப்பியனார் காலத்தே வஞ்சிப்பாவின் முதலில் அசை கூனாய் வந்தது;வஞ்சிப்பாவின் இறுதியில் அசை கூனாய் வருதல் இடைப்பட்ட வழக்கு;வஞ்சிப்பாவின் இடையில் அசை கூனாய் வருதல் கடைப்பட்ட வழக்கு;வஞ்சிப்பாவில் சீர் கூனாய் வருதலும் கடைப்பட்ட வழக்கு.ஆசிரியம்வெண்பாக்கலிகளில் முதற்கண் சீர் கூனாய் வருதல்தொல்காப்பியர்கால வழக்கு. ஆசிரிய அடிகளின் இடையில் அசை கூனாய் வருதல்பிற்பட்ட வழக்கு.‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ (குறுந். 25)‘சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே’ (குறுந். 102)‘வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே’ (அகநா. 276)என ஆசிரியப்பாவின் ஈற்றடியின் இடையில் அசை கூனாக வந்தது.பிற்காலத்தே வஞ்சியடியிலும் சீர் கூனாய் வந்தமையாலும், ஆசிரியஅடியிலும் அசை கூனாய் வந்தமையாலும், இன்ன இடத்தே அசை கூனாய் வரும்,இன்ன இடத்தில் சீர் கூனாய் வரும் என்று கூறாது, பொதுவாகக் கூன்களைத்தனிச்சொல் என வழங்குவராயினர். அவிநயனார், காக்கைபாடினியார்,யாப்பருங்கல ஆசிரியர் முதலியோர் இக்கருத்தினர். (வேங். இலக்.பக்.83-85)