அளப்பூர்

திருநாவுக்கரசு சுவாமிகளின் பாடலில் இடம் பெற்ற இத்தலம், சிவன் கோயில் பெற்றதொரு ஊர் என்று மட்டுமே தெரிய வருகிறது ஊர் என்ற பொதுக்கூறு கொண்டு முடிவது என்பது, ஊர் பொதுக் கூறுகள் கொண்டு முடியும் பெயருடன் இதனையும் இவர் சுட்டிச் செல்வதால் தெரிய வருகிறது. மேலும் அளம் என்பதற்குத் தமிழ் லெக்ஸிகன் உப்பளம், நெய்தல் நிலம், களர் நிலம், என்று பொருள் கூறுவதை நோக்க இவ்வூர் ( vol | part. 1 பக். 168 ) கடற்கரை சார்ந்த ஊராக அமைந்து அளம் + ஊர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக்கருத இடமுண்டு.
அண்ணாமலை யமர்ந்தார் ஆரூர் உள்ளார்
அளப்பூரார் திருநா பதி – 265-3
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும் – – 285-4