அளபெடை

அசைக்கு உறுப்பாம் எழுத்துக்களுள் அளபெடையும் ஒன்று. மாத்திரைகுறையின் சீர்குன்றித் தளைகெட நின்றவழி யாப்பு அழியாமைப்பொருட்டுநெட்டுயிர் ஏழும், மெய் ங் ஞ் ண் ந் ம் ன் வ் ய் ல் ள் என்னும்பத்தும், ஆய்தமும், தம் மாத்திரை யின் நீண்டு ஒலித்தல் அளபெடையாம்.ஆகவே அளபெடை உயிரளபெடையும் ஒற்றளபெடையும் என இருவகைத்து. ஆஅ, ஈஇ, ஊஉ,ஏஎ, ஓஒ என நெட்டுயிர் ஐந்தும் தம் இனக்குறிலொடு சேர்ந்து அளபெடுத்தன.ஐகாரம் இகரத் தொடும் (ஐஇ) ஓளகாரம் உகரத்தொடும் (ஒளஉ) சேர்ந்துஅளபெடுத்தன. நெடிலும் குறிலும் சேர்ந்த உயிரளபெடை யின் மாத்திரைமூன்று. சிலவிடத்தே ஆஅஅ என ஈரளபெடுத்து நான்கு மாத்திரைபெறுதலுமுண்டு. உயிரள பெடை தனிநிலை, முதனிலை, இடைநிலை, இறுதிநிலை எனநான்கு வகைப்படும். விளி முதலியவற்றில் மூன்று மாத்திரை யின்மிக்கொலித்தல் செய்யுட்குப் பெரிதும் உதவுவதின்மை யின்விடுக்கப்பட்டது.இலங்ங்கு, எஃஃகு – என அளபெடுக்கும் புள்ளி எழுத்தின் பின்னர்அவ்வெழுத்தே மீண்டும் ஒருமுறை வரிவடிவில் எழுதப்படும். ஒற்றளபெடைசெய்யுளில் மிக அருகியே நிகழ்வது. இதன் மாத்திரை ஒன்றாம். (யா. கா. 4உரை)நெடிலும் குறிலும் சேர்ந்து ஓரொலியாய் வரும் மூன்று மாத்திரைபெற்றவையே அளபெடை யென்பர் வடநூலார். அதனை ஒட்டிப் பிற்காலத்தமிழ்நூலாகும் அளபெடை யைக் கொண்டனர்.மாத்திரை நீட்டத்திற்கு வரும் குற்றெழுத்தே அளபெடை யெழுத்து.மூன்று மாத்திரை கொண்டதோர் எழுத்துத் தமிழிற்கு இல்லை என்பதுதொல்காப்பியரின் கருத்து.சீரும் தளையும் சிதையின் அளபெடை அலகுபெறாது என்ற யாப்பிலக்கணவிதியும் (யா.கா. 38) இனக்குறிலையே அளபெடை எழுத்தாகக் கொள்ளும்கருத்துக்கு அரண் செய்கிறது.