அளபெடை வேறெழுத்து ஆகாமை

தொல்காப்பியனார் அளபெடையை முதலெழுத்துள் அடக்கிக் கொண்டார்.
நன்னூலார் முதலாயினார் அள பெடையைச் சார்பெழுத்தாகக் கொண்டனர்.
தனக்கெனப் பிறப்பிட மின்றித் தான் சார்ந்த எழுத்தின் பிறப்பிடமே
தனக்குப் பிறப்பிடமாகக் கொண்டொலிக்கும் எழுத்தே சார்பெழுத் தாம்.
அந்நிலை குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற மூன்றற்கே உரியது
ஆதலின், அவற்றையே தொல்காப்பியனார் சார்பெழுத்தாகக் கொண்டார்; அள பெடை
உயிரெழுத்துள் அடங்கலின் அதனைத் தனியெழுத் தாகக் கொண்டிலர்.
அளபெடை, நெட்டெழுத்தோடு இனக்குற்றெழுத்து நின்று நீண்டிசைப்ப
தொன்று எனினும், மொழிக்காரணமாய் வேறுபொருள் தாராது இசைநிறைத்தல்
மாத்திரைப் பயத்ததாய் நிற்றலின், வேறெழுத்து எனவைத்து எண்ணப்
படாததாயிற்று. இப்பெற்றி அறியாதார் நெடிலும் குறிலும் விரலும் விரலும்
சேர நின்றாற்போல இணைந்து அளபெடுக் கும் எனவும், அளபெடையெழுத்து
உயிரெழுத்துள் அடங் காது எனவும், சார்பெழுத்து என வேறு வைத்து எண்ணப்
படும் எனவும், தமக்கு வேண்டியவாறு கூறுப. நெடிலும் குறிலும் விரலும்
விரலும் சேரநின்றாற்போல அளபெழும் என்றல் பொருந்தாமைக்கு எழுத்தெடை
என்னாது அள பெடை என்னும் குறியீடே சான்றாகும். அளபெடை யாப்பி னுள் ஓசை
பற்றியே இரண்டு மாத்திரையும் ஒரு மாத்திரையு மாகப் பிரிக்கப்படும்.
(சூ. வி. பக். 24)