இகரம் னகரம் ரகரம் லகரம் ளகரம் ஆகிய ஐந்து ஈற்றுப் பெயர்களும்அளபெடுக்கும். அளபெடைப் பெயரின் ஈற்று இகரம் ஈகாரம் ஆகாது மாத்திரைநீளும். ஏனைய ஈறுகளின் ஈற்றயல் உயிர்மெய்நெடிலை யடுத்த அளபெடையெழுத்துஒன்றற்குமேல் இரண்டு மூன்று நீண்டொலிக்கும்.எ-டு : தொழீஇஇ, அழாஅஅன், சிறாஅஅர், மாஅஅல், கோஒஒள் (தொ. சொ.128, 138, 144, 152 கல். உரை)