அளபெடை விளியேற்குமிடத்து ‘இயற்கையஆகும் செயற்கை’ நிலை

உயர்திணையிடத்து இகரஈற்று அளபெடைப்பெயர் விளி யேற்கு மிடத்து, ஏனையஇகரஈற்றுப் பெயர் போல இ ‘ஈ’ ஆகாமல், மாத்திரைமிக்கு இகரஈறாகவேநிற்கும். இ ‘ஈ’ ஆகாமை யான் ‘இயற்கைய ஆகும்’ என்றும், மாத்திரைமிகுதலின் ‘செயற்கைய’ என்றும் கூறினார்.எ-டு : தொழீஇ – தொழீஇஇ, தொழீஇஇஇ(தொ. சொ. 125 சேனா. உரை)இங்ஙனமே ஆன்ஈறும், ரகார லகார ளகார ஈறுகளும் விளியேற்கும்.எ-டு : கிழாஅன், உழாஅன் – கிழாஅஅன், உழாஅஅன் (தொ.சொ.135)சிறாஅர், மகாஅர் – சிறாஅஅர் மகாஅஅர் (தொ. சொ.141)மாஅல் – மாஅஅல்; கோஒள் – கோஒஒள் (தொ. சொ. 149)