அளபெடைத் தொடை அடியளபெடையும், இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை,மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று என விகற்பம் ஏழுமாக எட்டாம்.‘ தாஅட் டாஅ மரைமலர் உழக்கிப்பூஉங் குவளைப் போஒ தருந்திக்காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்மாஅத் தாஅ ள் மோஒ ட் டெருமைதே எம் புனலிடைச் சோஒ ர் பாஅல்மீஇன் ஆஅ ர்ந் துகளும் சீஇர்ஆஅ னாஅ நீஇள் நீஇர்ஊரன் செய்த கேண்மைஆய்வளைத் தோளிக் கலரா னாவே’இப்பாடற்கண் முதல் ஏழு அடிகளிலும் அடி அளபெடை யுடன், இணைமுதலியனவும் முறையே காண்க. (யா. கா. 20)