அளபெடை பயின்று வரும் சந்தம் அளபெடை வண்ண மாகும்; இரண்டளபெடையும்பயிலச் செய்வது.எ-டு : ‘ மரா அ மலரொடு விரா அய்ப் பரா அம்’‘கண்ண் ட ண்ண் ணெனக் கண்டும் கேட்டும்’என வரும்.‘ தாஅம் படுநர்க்குத் தண்ணீ ருளகொல்லோ வாஅஅம் பல்விழி அன்பனை அறிவுறில் வாஅம் புரவி வழுதியொ டெம்மிடைத் தோஒ நுவலுமிவ் வூர்’இஃது அளபெடைத் தொடையாம். (தொ. செய். 219 நச்.) அளபெடை வண்ணமாவதுஅளபெடையில் வருவது. (வீ. சோ. 142 உரை)