அளபெடை தன் இயல்பான மாத்திரையின் மிக்கு நான்கு மாத்திரை பெற்றுநிற்கும் இகரஈற்றுப் பெயர்கள் ஏனைய இயல்பான இகரஈற்றுப் பெயர்விளியேற்குமிடத்து இகரம் ஈகாரம் ஆவது போல ஆகாது, விளியேற்கும் செய்கையுடையன.எ-டு : தொழீஇ – தொழீஇஇ, தொழீஇஇஇ (என முறையே நான்கு மாத்திரையும்ஐந்து மாத்திரை யுமாக அளபெடுக்கும்.) (தொ. சொ. 127 நச். உரை)அளபெடை மிக்க இகரஈற்றுப் பெயர் தொழீஇ என்பது. அஃது இயல்பாகவேநின்று விளியேற்று ஓசை வேறுபாட் டான் விளியாதலை உணர்த்தும்.(தொழீஇ – தொழிலையுடையவள். தொழீஇஇ – எனப் பின்னும் ஓரளபெடை ஈரளபெடைபெற்று விளியேற்றல் இவ்வுரையாளர்க்கு உடன்பாடு அன்று.) (தொ. சொ. 121தெய். உரை)