அளபெடை தன் இயல்பு மாத்திரையின் மிக்கு நான்கு மாத் திரையும் ஐந்துமாத்திரையும் பெற்று நிற்கும் இகர ஈற்றுப் பெயர். ஈகார ஈற்றுப் பெயர்அளபெடுத்து இகர ஈறாகும்.எ-டு : தொழீஇஇ, தொழீஇஇஇ(என முறையே நான்கு மாத்திரையும் ஐந்து மாத்திரையுமாக அளபெடுத்தன)(தொ. சொ. 125 சேனா. உரை)விளியேற்றற்கண் அளபெடையெழுத்து மிகக் கூடிய, அளபெடையான் இயல்பாகஇற்ற இகர ஈற்றுப் பெயர்.எ-டு : தொழீஇ : இது தொழுத்தை என்பதன் திரிபு (தொழிலையுடையவள்என்னும் பொருட்டு). (தொ. சொ. 127 நச். உரை)