அளபெடை இலக்கணம்

அளபெடை என்பது நெடில் நீண்டொலிக்குமிடத்தும், குறில் நெடிலாகி
நீண்டொலிக்குமிடத்தும் அந்நீட்சிக்கேற்ப ஒலிக்கப்பெறும் ஒலியளவை உணர
உடன்ஒலிக்கப்பெறும் இனக்குறில்களாம். இரண்டு மாத்திரை அளவிற்றாய
நெடில் ஒலி மூன்று நான்கு மாத்திரையாக நீண்டொலிக்க அதன் இனக்குறில்
முறையே ஒன்று இரண்டு அடுத்திணைத்து ஒலிக்கப்படும்.
தொல்காப்பியனார்க்கு இனமான குறிலே அளபெடை யெழுத்தாம்.
நெடிலொன்றே தனித்து மூன்று மாத்திரையும் நான்கு மாத்திரையுமாக
ஒலிக்க, அதன் இனக்குறில் ஒன்றோ இரண்டோ அறிகுறியாக எழுதப்படும் என்பது
நன்னூலார் கொள்கை.
இனி, மெய் அளபெடுக்குமிடத்து அந்த மெய்யே மீண்டும் ஒலிக்கப்படும்.
வரிவடிவில் அம்மெய்யே இரட்டித்து எழுதப்படும்.
உயிரளபெடையானது இயற்கையளபெடை, செயற்கை யளபெடை, எழுத்துப்பேறளபெடை,
இசைநூலளபெடை, குற்றெழுத்தளபெடை, நெட்டெழுத்தளபெடை, இன்னிசை யளபெடை,
சொல்லிசை யளபெடை எனப் பலவகைப்படும்.
எ-டு : இயற்கையளபெடை – குரீஇ;
செயற்கையள பெடை –
‘துப்பாய
தூஉ மழை’ (குறள் 12);
எழுத்துப்பேறளபெடை – உவா
அப்பதினான்கு; குற்றெழுத்தளபெடை
– தழூ
உ (தழு); நெட்டெழுத் தளபெடை –
ஆடூ
உ; இன்னிசையளபெடை –
‘கெடுப்பதூ
உம் கெட்டார்க்குச்……’
எடுப்ப
தூஉம் (குறள் 15);
சொல்லிசையளபெடை – எ
ழூஉ (எழுப்பி)
இவ்வளபெடை பொருள்வேறுபாடு அறிவிப்பதூஉம் உண்டு.
எ-டு : எழு : தன்வினை, எழூஉ : பிறவினை;
வெள – கைப்பற்று, வெள
உ – கைப்பற்றியே
விடு.
(தொ. சொ. 283 நச். உரை)