இயைபுத்தொடை அளபெடைத்தொடையுடன் இணைந்து வருவது அளபெடைஇயைபுத்தொடையாம்.எ-டு : ‘ஏஎ வழங்கும் சிலையாய் இரவரைமாஅ வழங்கும் வரை’இதன்கண், ஏஎ, மாஅ – அளபெடை; வரை, வரை என இரண்டடி இறுதியிலும் வந்தசொற்கள் இயைபு. ஆதலின், இப்பாட்டடிகளில் அளபெடை இயைபுத்தொடை வந்தவாறு.(யா. க. 40 உரை)இரவரை – இரவில் வருதலை நீக்குவாயாக.